வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மழை மாரியம்மன் கோவிலில், அடி ஞாயிறையொட்டி உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு வழிபாடும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. இந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.