பதிவு செய்த நாள்
12
ஆக
2015
12:08
ராசிபுரம்: அருணகிரிநாதர் விழா குழு, நாதஸ்வர தவுல் கலைஞர்கள் மற்றும் பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், அருணகிரிநாதர் ஆராதனை முன்னிட்டு, ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் ஸ்வாமிக்கு, 23ம் ஆண்டு குரு ஆராதனை விழா நடக்கிறது.ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் ஸ்வாமிக்கு, அருணகிரிநாதர் குரு ஆராதனை முன்னிட்டு, வரும், 15ம் தேதி, 23ம் ஆண்டு குரு ஆராதனை விழா நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேம், ரத உற்சவம் நடக்கிறது.மாலை, 6 மணிக்கு அருணகிரிநாதர் உற்வமூர்த்தி ஆலயத்தை சுற்றி வலம் வருகிறார். தொடர்ந்து, இசை கச்சேரி நடக்கிறது. விழாவில், ஜனகல்யாண் தலைவர் பரந்தாமன் தலைமை வகிக்கிறார். சிவாச்சாரியார் உமாபதி, நல்லாசிரியர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.சாக்ஸ் போனை கோவிந்தராசு, வயலின் கோவை பாபு, தவில் சாந்தாபுரம் ஆறுமுகம், லளிகம் ஸ்ரீதர் ஆகியோர் வாசிக்கின்றனர். ஏற்பாடுகளை, அருணகிரிநாதர் விழாக்குழு மற்றும் நாதஸ்வர தவுல் கலைஞர்கள், பாலதண்டாயுதபாணி பக்தர்கள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.