பதிவு செய்த நாள்
12
ஆக
2015
12:08
பொள்ளாச்சி : நெகமம் பகுதியில், 52 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என, இந்துமுன்னணி ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக்கூட்டம் நெகமம் - மூட்டாம்பாளையம் ராமர்கோவிலில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமை வகித்தார். நெகமம் ஒன்றிய பொதுச்செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஒன்றியச்செயலாளர் சுரேஷ்குமார் தீர்மானம் வாசித்தார். நெகமம் ஒன்றியத்தில், 52 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக கிளைகளில் கொடிக்கம்பங்களும், பெயர்ப்பலகையும் இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நெகமத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராம சிவகுமார் பங்கேற்கிறார். பொதுமக்களும், சதுர்த்தி பொறுப்பாளர்களும் கட்டாயம் மாலை அணிய வேண்டும்; காப்பு கட்ட வேண்டும். நெகமம் புது பஸ் ஸ்டாண்ட் - உடுமலை ரோட்டில் சாக்கடைக்கு மேல் கடைகளை வைத்து, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஐயப்பன், கார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.