சேதுநாராயணப்பெருமாள் கோயில் தேரோட்டம்: வடம் பிடித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2011 11:07
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழாவின் ஆறாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலையில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. ஸ்ரீதேவி தாயார் சிவப்பு பட்டிலும், சுவாமி பச்சைப்பட்டிலும், பூதேவி தாயார் மஞ்சள் பட்டிலும் திருத்தேரில் எழுந்தருளினர். தேரை ஒருபுறம் பெண்களும், மறுபுறம் ஆண்களும் வடம்பிடித்து இழுத்தனர். வீதியுலா முடிந்து மீண்டும் கோயிலை சென்றடைந்த சேதுநாராயணப் பெருமாளுக்கு பக்தர்கள் சார்பில் எதிர்சேவை நடந்தது. மாலையில் திருக்கல்யாண கோலத்தில் தேவியருடன் கோயிலில் எழுந்தருளலும் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன், செயலாளர் நாராயணன், பொருளாளர் அழகர், நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.