குலசேகரன் கோட்டை நவமாருதி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2015 10:08
வாடிப்பட்டி: ஸ்ரீராமதூதன் ராமனுக்கே தொண்டு செய்த அழியாபுகழ் பெற்ற ஆஞ்சநேயபெருமானுக்கு வாடிப்பட்டியிலே மதுரை- திண்டுக்கல் நான்கு வழி சாலையிலே குலசேகரன் கோட்டை என்னும் இடத்திலே நவ ஆஞ்சநேயர் ஆலயமானது அமைந்துள்ளது. அனுமன் அன்று சஞ்சீவியை கொண்டு செல்லும் போது அதிலிருந்து விழுந்த சிறுதுகளான சிறுமலையின் அடிவாரத்தில் ஸ்ரீஆஞ்சநேயர், ஒன்பது அனுமராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத விதமாக ஒரே இடத்தில் ஒன்பது அனுமாரை தரிசிக்கும் ஒரே ஆலயம் நம் நவ ஆஞ்சநேயர் ஆலயம் தான்.
ஆகஸ்ட் 14ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்தில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை: 9.00 மணிக்கு- ஸ்ரீராம யஞ்ஞமும் காலை: 10.00 மணிக்கு- ஸ்ரீஆஞ்சநேயருக்கு அபிஷேகம் காலை: 11.00 மணிக்கு- விசேஷ பூஜைகள் காலை: 11.30 மணிக்கு- மெய்சிலிர்க்கும் சிறப்பு நாம சங்கீர்த்தனம் மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் மதியம்: 2.00 மணிக்கு- சுந்தர காண்ட சொற்பொழிவு மாலை: 5.30 மணிக்கு- சகஸ்ரநாம அர்ச்சனை மாலை: 6.00 மணிக்கு- சிறப்பு பூஜை
பித்துருகளின் தோஷம் போக்கும் ஆடி அமாவாசை அன்று அனுமன் வழிபாடு சிறப்பளிக்கும் என்பதால் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அனுமனின் அருள் பெறுகிறார்கள்.
இக்கோயிலுக்கு வாடிப்பட்டியிலிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.