செஞ்சி:செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் 18 ஆயிரம் வளையல்களை கொண்டு அலங்காரம் செய்ய உள்ளனர்.செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் உள்ள லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஒவ்வொரு ஆடிப்பூரத்தன்றும் அம்மனுக்கு, வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து வருகின்றனர்.இந்த ஆண்டு 18 ஆயிரம் வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்ய உள்ளனர். அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். மாலை 4 மணிக்கு கேரள செண்டை மேளத்துடன் அம்மனுக்கு சீர் கொண்டு செல்லுதல், 5 மணிக்கு விக்னேஷ்வர அனுக்ஞை, 5.15 மணிக்கு துவாரக பூஜை, நடை திறப்பு, 5.30 மணிக்கு அம்மன் தரிசனமும் நடக்கிறது.மாலை 5:45 மணிக்கு ஸ்ரீசக்ர லலிதா பூஜையும், இரவு 8 .30 மணிக்கு சீர் சமர்ப்பணம், மகா தீபாராதனையும் செய்ய உள்ளனர். தொடர்ந்து ஸ்ரீசாந்தா சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவும், அன்னதானமும் நடக்க உள்ளது.