பாபநாசம்: பாபநாசம் அருகே நல்லூர் கிரிசுந்தரி உடனருளும் கல்யாண சுந்தரரேஸ்வரர் கோவிலில் துலாபாரம் நிகழ்ச்சி நடந்தது. இக்கோவில் உள்ள சிவ பக்தர் அமர்நீதிநாயனார் சிவபக்தர்களுக்கு அன்னதானம், உடை தானம் வழங்கி வந்துள்ளார். ஒரு முறை சிவபக்தர் ஒருவர் அமர்நீதிநாயனாரிடம் ஒரு ஆடையை (கோவணம்) கொடுத்துவிட்டு தான் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்விட்டுச் சென்றார். பின்னர் ஒருநாள் சிவபக்தர் திரும்பிவந்து கொடுத்துவிட்டு போன ஆடையை திருப்பி கேட்டுள்ளார். அமர்நீதிநாயனார் ஆடையை எடுத்து வரச் சென்றபோது அது எங்கும்தேடியும் கிடைக்கவி ல்லை. அதற்கு ஈடாக சிவபக்தரின் ஒரு ஆø டயை ஒரு தாரசு தட்டிலும் மற்றொரு தட்டில் புதிய ஆடைகளை அமர்நீதிநாயனார் வைத்தார். எடை சமமாக வில்லை. தான் வீட்டில் வைத்திருந்த அனைத்து ஆடைகளையும் தட்டில் வைத்தும் எடை சமமாக வில்லை. தான் என்ன செய்வது? என்று விழித்த அமர்நீதிநாயனார் தானும், தனது மனைவியும் தட்டில் ஏறி அமர்ந்தனர். அப்போது தான் இரு தட்டுகளும் தாரசில் நேராக இருந்தது. அப்போது அமர்நீதிநாயனாரின் சிவ தொண்டை பாராட்டி சிவனும், பார்வதியும் காட்சியளித்தனர் என்பது புராதன கதை. இக்கதையை நினைவு கூரும் வகையில் இக்கோவிலில் ஆண்டு தோறும் இங்குள்ள அமர்நீதிநாயனார் சிலைக்கு துலாபாரம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், திருவாவடுதுறை ஆதினகர்த்தர் சிவப்பிரகாச தேசிகர் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.