பதிவு செய்த நாள்
17
ஆக
2015
02:08
திருவாரூர்: திருவாரூர் அருகே திருவிளமல் அருள்மிகு மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ பெருவிழா வெகு விமர்சியாக நடந்தது. பல்வேறுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் அருகே திருவிளமலில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு மதுர பாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்யா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவ சக்தியாய் நின்று சகல சவுந்தர்ய, சவுபாக்கியங்களைஅருளும் தேவியால், முடியா பிரவியை முடித்து அருளும் அன்னைக்கு மார்கழியில் திருவாதிரை, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், ஆடிமாதம் ஆடிப்பூரம் மற்றும் சிவனக்குரிய அனை த்து நிகழ்வுகளும் வெகு விமர்சியாக நடப்பதால், பல்வேறுப்பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் எதிரில் பரந்து விரிந்துள்ள அக்னி தீர்த்த்தில் நீராடி அம்பாள், பதஞ்சலி மனோகரர் உள்ளிட்ட விக்ரகங்களை தரிசனம் செய்து வருகின்றனர்.
அகத்தியர்,ஆதி சங்கரர், சங்கீத மும்மூர்த்திகள், ஞான சம்மந்தர், மாணிக்க வாசகர், அருணகிரிநாதர் அம்பாளை அகம்மகிழ்ந்து போற்றி பாடியுள்ளனர். அன்ன பூரணிக்கே அன்னையாய் விளங்குவதால் ஆடிபூரத்தன்று அம்பிகைக்கு அன்னாபிஷேகமும், அன்னையின் திருவடி தரிசனத்தையும் காணமுடிகிறது. இந்த திருவடி சிறப்பை அப்பரடிகள் ‘விளமர் புறத்து அருள்மணி அடிபணி ந்தவர் நிலையெ பெருஞ்செல்வம் எய்தி நீடுலகில் நிலையாய் வாழ்வார்கள்’ என்றும் சம்மந்தரோ, ‘அத்தக அடி தொழ அருள் கண்ணோடு உமையவள்’ என்றும் பாடியுள்ளார். பெருமை வாய்ந்த திருவடி தரிசனம் சாப, பாவ விமோசனம் பெற்று முக்கி பெறுவார், இத்திரு நாளில் அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை பாலுாற்றி திருவடியை கண்டால் தடைபடும் திருமணம்,புத்திரபாக்கியம், பூரண உடல் நலம், செல்வ செழிப்பு பெறலாம், மேலும் மாவிளக்கு மாவு, பூஜையில் பங் கேற்று பிரார்த்தனை செய்தால் சர்வ மங்களமும் பெற்று துயரங்கள் கலை ந்து, பிணிகள், பீடைகள் நீங்கி பேரானந்த வாழ்வு வாழலாம் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர உற்சவ பெருவிழா கடந்த 8 ம் தேதி விக்னேஸ் வரபூஜை, வாஸ்த்து சாந்தியுடன் துவங்கியது. 9 ம் தேதி மாலை 6.45 மணிக்கு அருள்மிகு அம்பாளுக்கு அபிஷேகமும், இரவு 8.00 மணிக்கு பிரகார வலத் தில் உற்சவமூர்த்தி புறப்பாடு நடந்தது. 10 ம் தேதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உள் பிரகாரத்தில் புறப் பாடும், 11ம் தேதியும், 12 ம் தேதியும் அம்பாள் மயில்வாகனத்தில் புறப் பா டும்,13 ம் தேதி இரவு அம்பாள் ஐராவத வாகனத்தில் புறப்பாடும், 14 ம் தேதி பூத வாகனத்திலும், 15ம் தேதி ரிஷப வாகனத்தில் உள் பிரகாரத்தில் புறப்பா டும் நடந்தது. 16ம் தேதி காலை 9.45 மணிக்கு அம்பாளுக்கு பூர மகா அபிஷேகமும், காலை 11.30 மணிக்கு அம்பாள் பாத தரிசனமும், அம்பாளுக்கு அமுத சமர்ப் பனத்திற்குப் பின் பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6.45 மணிக்கு புஷ்பாஞ்சலியும்,மாலை 7.45 மணிக்கு மாவிளக்கேற்றி பூஜையும் வெகு விமர்சியாக நடந்தது.பல்வேறுப்பகுதிகளை சேர் ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் சத்திய சந்திரசேகர சிவாச்சாரியர் பிரசாதங்கள் வழங்கினார். இன்று 17ம் தேதி மாலை 6.45 மணிக்கு குத்து விளக்கு பூஜை மற்றும் விடையாற்றி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் அப்பகுதி கிராமத்தினர்கள் செய்திருந்தனர்.