பதிவு செய்த நாள்
18
ஆக
2015
12:08
பரமக்குடி: பரமக்குடி புனித அலங்காரமாதா ஆலய தேர்ப்பவனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த ஆலய வளாகத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பித்தளை மற்றும் வெண்கல உலோக கொடிமரத்தில் நேற்று கொடியேற்றப்பட்டது. ஜப மாலையில் உள்ள 53 மணிகளை நினைவூட்டும் வகையில், 53 அடி உயரத்தில், 200 கிலோ எடையுடன் கூடிய கொடிமரம் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் முதன் முறையாக அன்னை உருவம் பொறிக்கப்பட்ட கொடி சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் மைக்கேல்ராஜ் தலைமையிலும், பரமக்குடி பங்குத்தந்தை செபஸ்தியான் முன்னிலையிலும் ஏற்றப்பட்டது. பர்மாவைச் சேர்ந்த பாஸ்கா, பரமக்குடி எஸ்.எம்.எஸ்.எஸ்., செயலாளர் ஜெபமாலை சுரேஷ், கோல்கட்டா மறைவட்ட ஆல்பர்ட் சகாயராஜ், எஸ்.எஸ்.சி.சி., ரோம் ஜோசப் அந்தோணி ராஜா, பரமக்குடி பங்கு உதவித் தந்தை பிரேம்ஆனந், மதுரை பால்ராஜ் கலந்து கொண்டனர். அன்னையின் தேர் தினமும் மாலை சர்ச் வளாகத்தில் வலம் வரும். ஆக., 22ல் மாலை 6 மணிக்கு தூய அலங்கார அன்னையின் தேர்ப்பவனி முக்கிய வீதிகளில் வலம் வருகிறது. ஆக., 23 ல் காலை 8 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.