கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் பூரண புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி, இன்று (20ம் தேதி) காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான விழா நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று (19ம் தேதி) மாலை முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 8:00 மணிக்கு பூரணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:20 மணிக்கு குட்டியாண்டவர் மற்றும் வீரன் விமானங்களுக்கும், 9:40 மணிக்கு மூலவர் குட்டியாண்டவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை முதல் மண்டலாபிஷேகம் துவங்குகிறது.