பதிவு செய்த நாள்
20
ஆக
2015
12:08
ஆர்.கே.பேட்டை: ஆடிப்பூரத்தை ஒட்டி, வரும் 23ம் தேதி, மருவத்துாரம்மனுக்கு கஞ்சி கலயம் ஊர்வலம் நடக்கிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம், மருவத்துாரம்மன் கோவிலில், வரும் 23ம் தேதி, ஆடிப்பூரம் திருவிழா நடக்கிறது. இதில், காலை 9:00 மணிக்கு, திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, கஞ்சி கலய ஊர்வலம் புறப்படுகிறது. பகல் 12:00 மணியளவில், கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தலும், அன்னதானமும் வழங்கப்படுகின்றன.