விழுப்புரம்:கப்பியாம்புலியூர் கோதண்டராமர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் கோதண்டராமர் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று சுதர்சனஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று புண்யாகவாஜனம், மகாசாந்தி மற்றும் ஹோமங்கள் நடக்கிறது.நாளை காலை விஸ்வரூபம், அக்னி ஆராதனம் மற்றும் பிரதான ஹோமங்கள் செய்யப்படுகிறது. காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சீதா, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் வீதியுலா நடக்கிறது.