விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் அங்காளம்மன், பெரியபாளையத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விக்கிரவாண்டி பாரதி நகரில் அங்காளம்மன், பெரியபாளையத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 16ம் தேதி மாலை யாக சாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் இரண்டு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.