புதுச்சேரி: வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வைத்திக்குப்பம் முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 19 ம் தேதி துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு தாய் வீட்டு சீர் வரிசை செய்தல், மதியம் 2:00 மணிக்கு செடல் உற்சவம், 4:00 மணிக்கு தேரோட்டம்நடந்தது. இன்று (22 ம் தேதி) இரவு விநாயகர், முருகர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முத்து பல்லக்கு வீதியுலா நடக்கிறது. நாளை (23ம் தேதி) காலை காப்பு கலைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.