பதிவு செய்த நாள்
22
ஆக
2015
12:08
சேலம்: சேலம், அய்யந்திருமாளிகை, வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, சிவ சக்தி விநாயகர் கோவிலில், தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவக்கிரகம் பிரதிஷ்டை செய்து, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சேலம், அய்யந்திருமாளிகை, வீட்டு வசதிவாரிய குடியிருப்பில், நாற்பது ஆண்டுகளாக அருள் பாலித்துவரும் சிவசக்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி, தை மாதம் மற்றும் வளர்பிறை, வெள்ளி கிழமைகளில் இந்த ஆலயத்தில் திருவிளக்கு பூஜை விசேஷமாக நடைபெறும். ஏரளாமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் வேண்டுகோளுக்குகினங்க, சிவசக்தி விநாயகர் ஆலயத்தை புதுபித்து, கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து, கோவிலில் தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவக்கிரகம் விக்ரகங்கள் பிரதிஷ்ட்டை செய்யபட்டது. இம்மாதம் 19ம் தேதி குப்பாபிஷேக விழா துவங்கி, விநாயகர் பூஜை, நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, லட்சுமி ஹோமம் நடந்தது. 20ம் தேதி புதிய பிம்பங்களுக்கு கண் திறந்து, யந்திர ஸ்தாபனம் நடந்தது. பின்னர் யாகபூஜை நடந்தபட்டது.
நேற்று காலை இரண்டாம் கால பூஜை, ஹோமம், மஹா பூர்ணாஹீதி, கலசபுறபட்டு நடந்து, காலை 9.10 மணிக்கு விமான கோபுரம் குப்பாபிஷேகம் செய்யபட்டது. சேலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கும்பாபிஷேத்தை கண்டு மகிழ்தனர். கும்பாபிஷேகத்தை ஆகம முறைபடி ஊத்துமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் திருஞானசம்பந்த ஈசான சிவாச்சார்யார், கைலாச சிவாச்சார்யார் தலைமையில் ஏராளமான அர்சகர்கள் செய்தனர். மூலவர் விநாயகரை தொடந்து, தட்சணாமூர்த்தி, துர்க்கை, அரசு, வேம்பு விநாயகர், நவக்கிரங்களுக்கு கும்பாபபிஷேகம் செய்யபட்டது. மதியம் 12 மணிக்கு கோ பூஜை மற்றும் பிரசாதம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியார் வெங்கடேசன், வெங்கடசுப்பிரமணியன், தசரதன், மனேகரன், திருவேங்கடம், மணி ஆகியோர் செய்திருந்தனர்.