திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருவாசக முற்றோதுதல் நடந்தது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நேற்று திருவாசகமுற்றோதுதல் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6மணி வரையிலும் நடந்தது. சுவாமி சன்னதி பிரகாரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருக்கழுக்குன்றம் சிவனடியார் தாமோதரன், பழனிராஜம்மாள் தலைமை வகித்தனர். திருவாசகமுற்றோதுதலில் மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். ரதவீதிகளிலும் திருவாசகம் படித்தபடி ஊர்வலமாக சென்றனர்.