பதிவு செய்த நாள்
24
ஆக
2015
03:08
1. ராமே அத கோகுல கதே ப்ரமதா ப்ரஸக்தே
ஹுத அநுபேத யமுநா தமநே மத அந்தே
ஸ்வைரம் ஸமாரமதி ஸேவக வாத மூட:
தூதம் ந்யயுங்க்த தவ பௌண்ட்ரக வாஸுதேவ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு முறை பலராமனுக்கு கோகுலத்தில் ஆயர் பெண்களிடம் களிப்புடன் இருக்கத் தோன்றியது. இதனால் மயக்கத்துடன் இருந்தார். தான் அழைத்தபோது தன்னிடம் வர மறுத்த யமுனை நதியை தனது கலப்பையால் அடக்கினானாமே! அந்த நாட்களில் பவுண்ட்ரக வாசுதேவன் என்பவன் தனது வேலைக்காரர்கள் பேச்சில் மயங்கி, உன்னிடம் ஒரு தூதனை அனுப்பினான்.
2. நாராயண: அஹம் அவதீர்ண: இஹ அஸ்மி பூமௌ
தத்ஸே கில த்வம் அபி மாமக லக்ஷணாநி
உத்ஸ்ருஜ்ய தாநி சரணம் வ்ரஜ மாம் இதி த்வாம்
தூத: ஜகாத ஸகலை: ஹஸித: ஸபாயாம்
பொருள்: குருவாயூரப்பா! அந்த தூதன் உன்னிடம் வந்த பவுண்ட்ரகன் கூறியதாக பின்வருமாறு சொன்னான் - நாராயணனாகிய நான் இந்தப் பூமியில் பவுண்ட்ரக வாசுதேவனாக அவதாரம் செய்துள்ளேன் நீயும் உன்னை நாராயணனின் அவதாரம் என்று கூறிக்கொண்டு என்னுடைய குறிகளை அணிந்துள்ளாய். அவற்றை துறந்து விட்டு என்னிடம் சரண் புகுந்து விடு என்பதாகும். இதனைக் கேட்ட சபையில் உள்ள அனைவரும் சிரித்தனர்.
3. தூதே அத யாதவதி யாதவ ஸைநிகை: த்வம்
யாத: ததர்சித வபு: கில பௌண்ட்ரகீயம்
தாபேந வக்ஷஸி க்ருத அங்கம் அநல்ப மூல்ய
ஸ்ரீ கௌஸ்துப மகர குண்டல பீத சேலம்
பொருள்: குருவாயூரப்பா! அந்தத் தூதன் சென்ற பின்னர் நீ உனது யாதவ படைகளுடன் பவுண்ட்ரகனின் இடத்தை அடைந்தாய். ஸ்ரீவத்ஸம் என்ற மச்சம் போல் போலியாகத் தனது மார்பில் சூடு வைத்தத் தழும்பு ஏறியும், கவுஸ்துபம் என்று மார்பில் போலியான ஒரு ரத்தினத்தை வைத்துக் கொண்டும், காதுகளில் மகர குண்டலங்களோடும், இடுப்பில் மஞ்சள் பட்டுடனும் இப்படியாக இருந்த அவனை நீ கண்டாயாமே!
4. கால அயஸம் நிஜ ஸுதர்சநம் அஸ்யத: அஸ்ய
கால அநல உத்கர கிரேண ஸுதர்சநேந
சீர்ஷம் சகர்தித மமர்தித ச அஸ்ய ஸேநாம்
தத் மித்ர காசிப சிர: சகர்த்த காச்யாம்
பொருள்: குருவாயூரப்பா! அவன் கருமையான இரும்பினால் செய்த சக்கரம் ஒன்றை சுதர்ஸனம் என்று உன் மீது தொடுத்தான். ஆனால் உனது உண்மையான சுதர்ஸனமோ தீப்பிழம்புகளைக் கக்கியபடி சென்று அவன் தலையை அறுத்தது. அவனது படைகளையும் நீ அழித்தாய். அவனுக்கு உதவிய அவன் நண்பனான காசி மன்னனின் தலையை அறுத்து, அந்தத் தலை, காசியில் விழும்படி செய்தாய்.
5. ஜாட்யேந பாலக கிரா அபி கில அஹம் ஏவ
ஸ்ரீவாஸுதேவ இதிரூட மதி: சிரம் ஸ:
ஸாயுஜ்யம் ஏவ பவத் ஐக்ய தியா கத அபூத்
க: நாம கஸ்ய ஸுக்ருதம் கதம் இதி அவேயாத்
பொருள்: குருவாயூரப்பா! அந்தப் பவுண்ட்ரகன் தனது அறியாமையால் சிறு பிள்ளைத்தனமாக, தானே வாசுதேவன் என்று எண்ணி வந்தான் அல்லவா? உன்னுடன் இப்படியாக சிந்தனையில் ஒன்றியதால் அவன் மோட்சம் பெற்றான். உன்னிடம் ஐக்கியமானான். யார் யாருடைய புண்ணியத்தை எப்படி உணர முடியும்?
6. காசீ ஈஸ்வரஸ்ய தநய: அத ஸுதக்ஷிண ஆக்ய:
கர்வம் ப்ரபூஜ்ய பவதே விஹித அபிசார
க்ருத்யா அநலம் கம் அபி பாண ரண அதிபீதை:
பூதை: கதஞ்சந வ்ருதை: ஸமம் அப்யமுஞ்சத்
பொருள்: குருவாயூரப்பா! உன்னால் கொல்லப்பட்ட காசி மன்னனின் மகன் ஸுதட்சிணன் என்பவன் ஆவான். அவன் சிவனை வணங்கி உன்னைக் கொல்ல அபிசார மந்திரம் கூறினான். பாணாசுரப் போரில் உன்னிடம் பயந்து ஓடிய பூத கணங்களை அபிசார தேவதையாக உன்னிடம் அனுப்பினான்.
7. தால ப்ரமாண சரணாம் அகிலம் தஹந்தீம்
க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதித: அபி பௌரை:
த்யூத உத்ஸவே கிம் அபிநோ சலித: விபோ த்வம்
பார்ச்வஸ்தம் ஆசு விஸஸர்ஜித கால சக்ரம்
பொருள்: எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! அந்த அபிசார தேவதை பனைமரம் அளவிற்கு உயரமான கால்களை உடையதாகவும், அனைத்தையும் எரிப்பது போன்றும் இருந்தது. அதனைக் கண்டு அஞ்சிய மக்கள் உன்னிடம் வந்து இந்தச் செய்தியைக் கூறினார்கள். பகடை விளையாடிக் கொண்டிருந்த நீ இதனைக் கேட்டு சிறிதும் நகரவில்லை. உனது ஸுதர்ஸன சக்கரத்தை மட்டுமே விடுத்தாய்.
8. அப்யாபததி அமித தாம்நி பவந் மஹா அஸ்த்ரே
ஹா ஹா இதி வித்ருதவதீ கலு கோர க்ருத்யா
ரோஷாத் ஸுதக்ஷிணம் அதிக்ஷண சேஷ்டிதம் தம்
புப்லோஷ சக்ரம் அபி காசி புரீம் அதாக்ஷீத்
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய ஸுதர்சன சக்கரம் மிகுந்த ஒளியை வீசியபடி வந்தது. அதனால் துரத்தப்பட்ட அபிசார தேவதை ஹா ஹா என்று கதறியபடி தன்னை ஏவிய அந்த ஸுதட்சிணனையே அழித்தது. உனது சக்ரம் காசி நகரத்தையே அழித்தது.
9. ஸ கலு விவித: ரக்ஷ: காதே க்ருத உபக்ருதி: புரா
தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா கலதாம் கத:
நாக ஸசிவ: தேச க்லேசம் ஸ்ருஜந் நகர அந்திகே
ஜடிதி ஹலிநா யுத்யந் அத்தா பபாத தல ஆஹத:
பொருள்: குருவாயூரப்பா! முன்பு ஒரு சமயம் (த்ரேதா யுகத்தில்) நீ இராமாவதாரம் கொண்டபோது அசுரர்களை அழிப்பதற்கு விவிதன் என்பவன் உதவினான். அவன் நீ க்ருஷ்ணாவதாரம் எடுக்கும்போது உனது கைகளால் சாகடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினான். இதனால் மிகுந்த தீயச் செயல்களைச் செய்தான். மேலும் நரகாசுரனின் மந்திரியாக அந்த நாட்டிற்குப் பல தீமைகளைச் செய்தான். துவாரகை அருகில் போர் செய்து வந்தபோது பலராமன் அவனுடன் போர் புரிந்து தனது கைகளால் அடித்துக் கொன்றாராமே!
10. ஸாம்பம் கௌரவ்ய புத்ரீ ஹரண நியமிதம்
ஸாந்த்வநா அர்த்தீ குரூணாம்
யாத: தத் வாக்ய ரோஷ உத்த்ருத
கரி நகர: மோசயாமாஸ ராம:
தே காத்யா: பாண்டவேயை: இதி யது
ப்ருதநாம் ந அமுச: த்வம் ததாநீம்
தம் த்வாம் துர்போத லீலம் பவந புரபதே
தாப சாந்த்யை நிஷேவே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸாம்பன் (ஜாம்பதியின் மகன்) என்பவன் துரியோதனின் மகளான லட்சணையைக் கவர்ந்து சென்றான். எனவே அவன் கவுரவர்களால் சிறை வைக்கப்பட்டான். அவனை மீட்டு வர பலராமன் சென்றான். ஆனால் அவர்கள் கூறிய சொற்களைக் கேட்டு கோபம் கொண்ட பலராமன், தனது கலப்பையால் ஹஸ்தினாபுரத்தையே பெயர்த்து, ஸாம்பனை மீட்டாராமே! நீ பலராமனுடன் யாதவர்களை அனுப்பவில்லை. காரணம், கவுரவர்கள், பாண்டவர்கள் கைகளால் மடிய வேண்டியவர்கள் என்று நீ அறிந்தாய். இப்படிப்பட்ட லீலைகள் செய்தவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எனக்குத் துன்பம் நீங்கி அமைதி விளைய வேண்டுகிறேன்.