Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ஸால்வ வதம், பாரதப் போர்
ஸால்வ வதம், பாரதப் போர்
எழுத்தின் அளவு:
ஸால்வ வதம், பாரதப் போர்

பதிவு செய்த நாள்

24 ஆக
2015
04:08

1. ஸால்வ: பைஷ்மீ விவாஹே யது குல
விஜித: சந்த்ர சூடாத் விமாநம்
விந்தந் ஸௌபம் ஸ மாயீ த்வயி வஸதி
குரூத் த்வத் புரீம் அப்யபாங்க்ஷீத்
ப்ரத்யும்ந: தம் நிருந்தந் நிகில யது படை:
ந்யச்ரஹீத் உக்ர வீர்யம்
தஸ்ய அமாத்யம் த்யுமந்தம் வயஜநி ச ஸமர:
ஸப்தவிம்சதி அஹ அந்த:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ருக்மிணி கல்யாணத்தின்போது உனது யாதவ படைகளிடம் ஸால்வன் தோல்வியடைந்தான். (அதனால் சினம் கொண்டு) சிவனை வழிபட்டு ஸௌபம் என்று அழைக்கப்படும் ஆகாய விமானத்தைப் பெற்றான். நீ ராஜஸுய யாகத்திற்காக ஹஸ்தினாபுரம் சென்றிருந்த போது, அந்தச் ஸால்வன் துவாரகையை தாக்கி பெரும் சேதம் உண்டாக்கினான். அவனைப் ப்ரத்யும்னன் தடுத்துப் போரிட்டான். ஸால்வனின் அமைச்சனான த்யுமான் என்பவனைக் கொன்றான். இப்படியாக அந்த யுத்தம் இருபத்து ஏழு நாட்கள் நடைபெற்றது.

2. தாவத் த்வம் ராமசாலீ த்வரிதம் உபகத:
கண்டித ப்ராய ஸைந்யம்
ஸௌப ஈசம் தம் ந்யருந்தா: ஸ ச கில
கதயா சார்ங்க அப்ரம் சயத் தே
மாயா தாதம் வ்யஹிம்ஸீத் அபி தவ புரத:
தத் த்வயா அ க்ஷண அர்த்தம்
ந அஜ்ஞாயி இதி ஆஹு: ஏகே தத் இதம்
அவமதம் வ்யாஸ: ஏவ ந்யஷேதீத்

பொருள்: குருவாயூரப்பா! நீ பலராமனுடன் விரைந்து துவாரகைக்கு வந்தாய். ஸால்வனின் படைகளை விரட்டியடித்து அவனைத் தடுத்தாய். அவன் தனது கதாயுதத்தின் மூலம் உனது கைகளில் இருந்த சார்ங்கம் என்னும் வில்லை வீழ்த்தினானாமே! பின்னர் உனது தந்தையைப் போல ஒருவரை மாயமாக உருவாக்கி அவரைக் (அந்த மாய உருவத்தை) கொன்றான். அவன் உண்மையாகவே உனது தந்தையைக் கொன்றான், அவன் செய்தது மாயை என்பதை நீ சிலநொடிகள் உணரவில்லை என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இதனை வ்யாஸர் மறுத்தள்ளாரே!

3. க்ஷிப்த்வா ஸௌபம் கதா சூர்ணிதம் உதக நிதௌ
மங்க்ஷு ஸால்வே அபி சக்ரேண
உத்க்ருத்தே தந்தவக்த்ர: ப்ரஸபம் அபிபதந்
அப்யமுஞ்சத் அதாம் தே
கௌமோதக்யா ஹத: அஸௌ அபி ஸுக்ருத நிதி:
சைத்யவத் ப்ராபத் ஐக்யம்
ஸர்வேஷாம் ஏஷ பூர்வம் த்வயி த்ருத மநஸாம்
 மோக்ஷணார்த்த: அவதார:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸால்வனின் ஸௌபம் என்ற ஆகாய விமானத்தை உனது கதை ஆயுதத்தினால் தூளாக்கினாய். துகள்களைக் கடலில் எறிந்தாய். அவனுடைய கழுத்தையும் உனது சக்கரத்தால் அறுத்தாய். அப்போது தந்தவக்கிரன் என்பவன் உன்மீது கதாயுதத்தை சுழற்றி அடித்தான். நீ உடனே கவுமோதகீ என்று அழைக்கப்படும் உனது கதையால் அவனைக் கொன்றாய். அவனும் சிசுபாலன் போல் உன்னுடைய மோட்சத்தை அடைந்தான் (இவனும் துவார பாலகர்களில் ஒருவன், தசகம் 11 காண்க). கடந்த பிறவிகளில் உன்னிடம் ஈடுபாடு கொண்டிருந்தவர்களை மோட்சத்தின் மூலம் கரையேற்றுவதே உனது க்ருஷ்ணாவதாரம் அல்லவா?

4. த்வயி ஆயாதே அத் ஜாதே கில குரு
ஸதஸி த்யூதகே ஸம்யதாயா;
க்ரந்தந்த்யா யாஜ்ஞ ஸேந்யா: ஸ கருணம்
அக்ருதா: சேல மாலாம் அநந்தாம்
அந்த அந்த ப்ராப்த சர்வ அம்சஜ முநி
சகித த்ரௌபதீ சிந்தித: அத
ப்ராப்த: சாக அந்தம் அச்நந் முநி கணம்
அக்ருதா: த்ருப்திமந்தம் வந அந்தே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ஹஸ்தினாபுரத்தில் இருந்து துவாரகை கிளம்பியதும் அங்கு கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சூதாட்டம் நடந்தது. அதில் நான் பணயப் பொருளாக வைக்கப்பட்டு இழக்கப்படவும் நேர்ந்தது என்று திரௌபதி அழுதாள். நீ அவளுடைய சேலையை உனது கருணை போன்று அளவில்லாமல் வளரச் செய்தாய். முன்பு ஒரு சமயம் பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில், அவர்கள் உணவு வேளை முடிந்த பின்னர் அவர்களிடம் விருந்தினராக பரமசிவனின் அவதாரமான துர்வாசர் வந்தார். (உணவு இல்லாமல் பயந்த) திரௌபதி உன்னைத் துதித்தாள். உடனே நீ அங்கு வந்து பாத்திரத்தில் இருந்த கீரையை உட்கொண்டு துர்வாஸருக்கும் அவரது சீடர்களுக்கும் உண்டான பசியை நீக்கினாய்.

5. யுத்த உத்யோகே அத மந்த்ரே மிலதி ஸதி
வ்ருத: பல்குநேந த்வம் ஏக:
கௌரவ்யே தத்த ஸைந்ய: கரி புரம் அகம:
தாத்ய க்ருத் பாண்டவார்த்தம்
பீஷ்ம த்ரோண ஆதி மாந்யே தவ கலு
வசநே திக்க்ருதே கௌரவேண
வ்யா வ்ருண்வந் விச்வரூபம் முநி
ஸதஸி புரீம் க்ஷோபயித்வா கத: அபூ:

பொருள்: குருவாயூரப்பா! பின்னர் யுத்தம் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது அர்ஜுனன் உன்னை மட்டும் தங்களுக்குத் துணையாக இருக்கும்படி வேண்டினான். உனது படைகளைத் தனக்கு அளிக்கும் படி துரியோதனன் கேட்டான். நீயும் அவர்கள் கேட்டபடி அளித்தாய். அதன் பின்னர் பாண்டவர்களின் தூதனாக ஹஸ்தினாபுரம் சென்றாய். உனது தூது வார்த்தைகளை பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட பலரும், முனிவர்களும் ஆமோதித்தனர். ஆனால் துரியோதனன் அவற்றை அலட்சியம் செய்தான். இதனால் கோபம் கொண்ட நீ முனிவர்கள் நிறைந்த அந்தச் சபையில் உனது விசுவரூபத்தைக் காண்பித்து அவர்கள் கலங்கும்படி செய்தாய். பின்னர் பாண்டவர்களிடம் திரும்பி வந்தாய்.

6. ஜிஷ்ணோ: த்வம் க்ருஷ்ண ஸுத: கலு ஸமர
முகே பந்து காதே தயாளும்
கிந்நம் தம் வீக்ஷ்ய வீரம் கிம் இதம் அயி
ஸகே நித்ய ஏக: அயம் ஆத்மா
க: வத்ய: க: அத்ர ஹந்தா தத் இஹ வதபியம்
ப்ரோஜ்ய மயி அர்ப்பித ஆத்மா
தர்ம்யம் யுத்தம் சர இதி ப்ரக்ருதிம்
அநயதா தர்சயந் விச்வ ரூபம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் போரில் நீ அர்ஜுனனின் தேரில் சாரதியாக அமர்ந்தாய். போர் தொடங்கும் நிலையில் தனது எதிரில் நின்றிருந்த தனது உறவினர்களை எதிர்த்துப் போரிடவேண்டும் என்பதை எண்ணி அர்ஜுனன் அஞ்சி கலங்கி நின்றான். இதனால் நீ அவனிடம், நண்பனே! இது என்ன ஒரு சிந்தனை? ஆத்மா என்பது அழிவில்லாமல் உள்ளது. உலகில் கொல்பவன் யார்? கொல்லப்படுவன் யார்? (யாரும் இல்லை). ஆகையால் நீ கொல்லப் போவதால் உண்டாகும் பயத்தை (பாவம் காரணமாக பயம்) விடுத்து, என்னிடம் உனது மனதை முழுவதுமாக சரணம் என்று அர்ப்பணம் செய்வாயாக! பின்னர் தர்மவழியில் போர் புரிவாய்! என்று கீதோபதேசம் செய்தாயாமே! உனது விசுவரூபத்தையும் அவனுக்குக் காண்பித்தாய். அவன் தனது இயல்பான குணங்களை அடைந்தான்.

7. பக்த உத்தம்ஸே அத பீஷ்மே தவ தரணி
பர க்ஷேப க்ருத் ஏக ஸக்தே
நித்யம் நித்யம் விபிந்ததி அவநி ப்ருத்
அயுதம் ப்ராப்த ஸாதே ச பார்த்தே
நிச்சஸ்த்ரத்வ ப்ரதிஜ்ஞாம் விஜஹத்
அரிவரம் தாரயந் க்ரோத சாலீ இவ
ஆதாவந் ப்ராஞ்ஜலிம் தம் நத சிரஸம்
அதோ வீக்ஷ்ய மோதாத் அபாகா:

பொருள்: குருவாயூரப்பா! உனது பக்தர்களுள் மிகவும் உத்தமரான பீஷ்மர், பூமியின் பாரத்தைக் குறைப்பதான உனது உள்நோக்கம் ஒன்றையே தனது சிந்தனையாகக் கொண்டு அன்றாடம் யுத்தத்தில் பதினாயிரம் பேரைக் கொன்று வந்தார். இதனைக் கண்ட அர்ஜுனன் சோர்வுற்றான். உடனே ஆயுதம் தொடுவதில்லை என்ற நீ செய்த சபதத்தையும் மறந்து, உனது சிறந்த ஆயுதமான சக்கரத்தைக் கையால் சுழற்றியபடி பீஷ்மரை நோக்கி ஓடினாயாமே? உன்னைக் கண்டு மகிழ்ந்த பீஷ்மர் கைகூப்பி தலை வணங்கி நின்றார். நீயும் மகிழ்வுற்று திரும்பிச் சென்றாயாமே!

8. யுத்தே த்ரோணஸ்ய ஹஸ்தி ஸ்திர ரண
பகதத்த ஈரி தம் வைஷ்ணவ அஸ்த்ரம்
வக்ஷஸி ஆதத்த சக்ர ஸ்தகித ரவி
மஹா: ப்ரார்த்தயத் ஸிந்து ராஜம்
நாகாஸ்த்ரே கர்ண முக்தே க்ஷிதிம் அவநம்
அயந் கேவலம் க்ருத்த மௌலிம்
தத்ரே தத்ர அபி பார்த்தம் கிம் இவ ந ஹி
பவாந் பாண்டவாநாம் அகார்ஷீத்

பொருள்: குருவாயூரப்பா! அர்ஜுனன் துரோணருடன் மோதியபோது பகதத்தன் யானைமீது அமர்ந்து கொண்டு உன்மீது நாராயண அஸ்திரத்தைத் தொடுத்தானாமே! உனது மார்பினால் அதனைத் தாங்கி நிறுத்தினாய். உனது சக்கரத்தின் மூலமாக சூரியனை மறையும்படி ஒரு மாயையை உண்டாக்கி, ஸிந்து ராஜனான ஜயத்ரதனை வீழ்த்தினாய். கர்ணன், அர்ஜுனன் மீது நாகாஸ்திரத்தைச் செலுத்தியபோது, நீ தேரை சற்று கீழே அழுத்தி அர்ஜுனனின் க்ரீடத்தை மட்டும் அந்த அஸ்திரம் தாக்கும்படி செய்தாயாமே! நீ பாண்டவர்களுக்கு என்ன நன்மைகள்தான் செய்யவில்லை!

9. யுத்த ஆதௌ தீர்த்த காமீ ஸ கலு ஹல
தர: நைமிச க்ஷேத்ரம் ருச்சந்
அப்ரத்யுத்தாயி ஸுத க்ஷய க்ருத் அத
ஸுதம் தத் பதே கல்பயித்வா
யஜ்ஞ: க்நம் பல்வலம் பர்வணி பரிதலயந்
ஸ்நாந தீர்த்த: ரண அந்தே
ஸம்ப்ராப்த: பீம துர்யோதந ரணம்
அசமம் வீக்ஷ்ய யாத: புரீம் தே

பொருள்: குருவாயூரப்பா! யுத்தம் தொடங்கிய காலத்திலேயே பலராமன் நைமிசாரண்யம் சென்று விட்டான். இவன் வருவதை உணர்ந்தும் ஆசனத்தில் இருந்து எழுந்து மரியாதை செய்யாத ஸுதபவுராணி கரைக் கொன்றான். அவரது இடத்தில் அவரது மகனை அமர்த்தினான். அங்கு இருந்த பல்லவன் என்ற அரசன் முனிவர்களை வேள்வி செய்ய விடாமல் தடுத்தான். அவனை பலராமன் அழித்தான். பிறகு பல்வேறு புண்ணிய நீர்களில் நீராடி, யுத்தம் முடியும் நேரத்தில் குருக்ஷேத்ரத்திற்கு வந்தான். அவன் வந்த நேரம் பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதைப்போர் நடந்தது. இதனைக் கண்ட பலராமன் துவாரகைக்குச் சென்று விட்டான்.

10. ஸம்ஸுப்த த்ரௌபதயே க்ஷபண ஹததியம்
த்ரௌணிம் ஏத்ய த்வத் உக்த்யா
தந் முக்தம் ப்ராஹ்மம் அஸ்த்ரம் ஸமஹ்ருத
விஜய: மௌலி ரக்நம் ச ஜஹ்ரே
உச்சித்யை பாண்டவாநாம் புந: அபி ச விசதி
உத்தரா கர்ப்பம் அஸ்த்ரே
ரக்ஷந் அங்குஷ்ட மாத்ர: கில ஜடரம் அகா:
சக்ர பாணி: விபோ த்வம்

பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! (துரோணரின் மகனான) அசுவத்தாமன் தீய எண்ணம் கொண்டவனாக, திரௌபதியின் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களைக் கொன்றான். மேலும் ப்ரம்மாஸ்திரத்தையும் தொடுத்தான். உனது கட்டளைப்படி அர்ஜுனன் அந்த அஸ்திரத்தைத் தடுத்து நிறுத்தினான். மேலும் அசுவத்தாமன் தலையில் இருந்த இரத்தினக் கல்லையும் கவர்ந்தான். அதன் பின்னர் அசுவத்தாமன் பாண்டவர்களின் வம்சத்தை அழிக்க ஏவிய அஸ்திரம் உத்தரையின் கர்ப்பத்தில் பாய்ந்தது. நீ உடனே கட்டைவிரல் அளவுள்ளவனாக மாறி, ஸுதர்சன சக்கரம் உடையவனாக, உத்தரையின் கர்ப்பத்தில் நுழைந்தாயாமே!

11. தர்ம ஓகம் தர்ம ஸுநோ: அபிததத்
அகிலம் சந்தம்ருத்யு: ஸ பீஷ்ம
த்வாம் பச்யந் பக்தி பூம்நா ஏவ ஹி ஸபதி
யயௌ நிஷ்கல ப்ரஹ்ம பூயம்
ஸம்யாஜ்ய அத அச்வமேதை: த்ரிபி:
அதிமஹிதை: தர்மஜம் பூர்ண காமம்
ஸம்ப்ராப்த: த்வாரகாம் த்வம் பவந
புர பதே பாஹிமாம் ஸர்வ ரோகாத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தான் விருப்பம் கொண்ட நேரத்தில் மரணம் அடையும்படியான வரம் பெற்றிருந்த பீஷ்மர், தர்மனுக்குப் பலவிதமான நல்லறங்களைப் போதித்தார். உன்னிடம் உள்ள பக்தி மிகுதியாக, உன்னைப் பார்த்துக்கொண்டே மோட்சம் பெற்றாராமே! அதன் பின்னர், தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவராக இருந்த தர்மனுக்காக மூன்று அச்வமேத யாகங்களைச் செய்தாயாமே! இறுதியாக துவாரகைக்குச் சென்றாய். இப்படிப்பட்ட நீ என்னை அனைத்து பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar