பதிவு செய்த நாள்
24
ஆக
2015
05:08
(வேங்கடேஸ்வர ஸ்வாமி சுப்ரபாதம் அருளியவர்)
கௌசல்யாஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்ததே
உத்திஷ்ட நரசார்தூல! கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த! உத்திஷ்ட கருடத்வஜ!
உத்திஷ்ட கமலாகாந்த ! த்ரைலோக்யம் மங்களம் குரு
கலியுக தெய்வம் திருவேங்கமுடையானுக்கு பிரதி நித்யம் சேவிக்கின்ற மேற்குறிப்பிட்ட சுப்ரபாதத்தை அருளிச் செய்வதவர். ஹஸ்திகிரிநாதன். இவரை அன்பாக அண்ணன் என்றும் அழைப்பர். இவர் வேதாந்த தேசிகரின் குமாரரான வரதாசார்யலு (குமார தேசிகர்) இடத்தே சமஸ்கிருத வேதாந்தத்தையும் மணவாளமாமுனிகளிடத்தே திராவிட வேதாந்தத்தையும் கற்றுத் தேர்ந்தார். மணவாளமாமுனிகள் அண்ணனை விட எட்டு ஆண்டுகள் வயதில் சிறியவர். இவர் காலத்திற்கு பிறகு அண்ணன் சுமார் பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் கி.பி. 1361 ப்ளவ வருடம் ஆடி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் கி.பி. 1454 ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் நவமி பூசம் நட்சத்திரத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார்.
இவர் ஒருநாள் குருவான மணவாள மாமுனிகளோடு சேர்ந்து ஸ்ரீநிவாசனை சேவிப்பதற்காக திருமலைக்கு வந்தார். அவ்விடியற்காலை வேளை சீடனை பார்த்து ஸ்வாமி மீது சுப்ரபாதம் அருளக்கூடாதா எனக் கூற, அடுத்த கணமே, அவரின் கட்டளையின்படி வேங்கடேஸ்வர சுப்ரபாதம் ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் என்னும் நான்கினையும் தன்னிசையாகப் பாடினார். இந்த சுப்ரபாதத்திற்கு முன்னர் தொண்டரடிப்பொடியாழ்வார் (விப்ரநாராயணர்) அருளிச் செய்த திருப்பள்ளி எழுச்சி யையே சுப்ரபாதமாக சேவிப்பது வழக்கம்.
இவருடைய வேதாந்த ஞானத்தைப் பாராட்டி குரு பிரதிவாதி பயங்கரம் என்னும் விருது வழங்கி கவுரவித்தார். இன்றும் இவருடைய வம்சத்தினர் பிரதிவாதி பயங்கரம் என்னும் வீட்டுப் பெயரோடு அழைக்கப்படுகிறார்கள். திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோயில் தெற்கு மாடவீதியில் உள்ள லக்ஷ்மி நாராயண ஸ்வாமி கோயிலில் இன்றைக்கும் இவருக்கு விக்ரஹ ஆராதனை நடந்து வருகிறது.