குங்குமச் சிமிழிலிருந்து, குங்குமத்தை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் சேர்த்து எடுத்து நெற்றியில் இட்டால் சக்தி பெருகும். ஆள்காட்டி விரலால் மட்டும் எடுத்து வைத்தால் சுதந்திர வாழ்வு பெருகும். நடுவிரலால் வைத்தால் ஆயுள் கூடும். மோதிர விரலால் குங்குமம் வைத்தால் உடல் பலம் பெறும். சுண்டு விரலால் பொட்டு வைக்கும் பழக்கம் இல்லை. பொட்டு வைக்க இடது கையை பயன்படுத்தக் கூடாது. அறிவும், சிந்தனையும் கூடும் இடம் நெற்றி. புருவங்களின் மத்தியில் உயிர்த்துடிப்புள்ள சில முக்கிய நரம்புகள் உள்ளன. இதன் மீது மருத்துவ குணமுடைய குங்குமத்தை வைக்கும் போது உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை விளைகிறது.