ஹரி என்றால் விஷ்ணு, பல என்றால் பலராமன். இவர்கள் சகோதரர்கள். இவர்கள் இணைந்து ஒரு காரியம் செய்தால் அதில் தோல்வியே கிடையாது. இவர்களுக்கு மிகவும் பிடித்தமான மரம் நெல்லி. இந்த மரத்திற்கு ஹரிபல மரம் என்றும் பெயருண்டு. இம்மரத்தை வீட்டின் முன்பகுதியில் நட்டு இதன் நிழலில் நின்று தானம் செய்வது மிகவும் நல்லது. இம்மரத்தில் வசிக்கும் மகாலட்சுமி தானத்தால் மகிழ்ந்து நல்லருள் தருவாள் என்பர்.