பதிவு செய்த நாள்
27
ஆக
2015
05:08
1. ஆதௌ ஹைரண்யகர்பீம் தநும் அவிகல
ஜீவ ஆத்மிகாம் ஆஸ்தித: த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயா குண கண
கசித: வர்த்தஸே விச்வ யோநே
தத்ர உத்வ்ருத்தேந ஸத்வேந குண
யுகளம் பக்தி பாவாம் கதேந
ச்சித்வா ஸத்வம் ச ஹித்வா புந:
அநுபஹித: வர்த்திதாஹே த்வம் ஏவ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகின் காரணப்பொருளே! ப்ரளயத்தின் பின்னர் உலகைப் படைக்க எண்ணியபோது, அனைத்து ஜீவன்களின் வடிவமான ஹிரண்யகர்ப்ப உடலை எடுத்தாய். பின்னர் தனியான ஜீவன்களின் உருவமாக மாறினாய். அதன் பின்னர் மாயையின் கூட்டத்துடன் கலந்தாய். (மாயையின் கூட்டம் என்பது - மஹத், அகங்காரம், பஞ்ச பூதங்கள், கர்ம இந்த்ரியங்கள், ஞான இந்த்ரியங்கள், ப்ராணன்கள்). உனது அந்த உருவில் ஒரு ஜீவனாகிய நான், பக்தி வளர்ச்சியடைந்து, ஸத்வ குணம் மேலோங்கி நின்று, அதனால் ரஜோ மற்றும் தாமஸ குணங்களை அழிப்பேன். பின்னர் ஸத்வ குணத்தையும் விட்டு, குணங்களால் மறைக்கப்படாத உனது ஸ்வரூபமாக நான் மாறுவேன் (ஒன்றி விடுவேன்).
2. ஸத்வ உந்மேஷாத் கதாசித் கலு விஷய
ரஸே தோஷ போதே அபி பூமந்
பூய: அபி ஏஷ: ப்ரவ்ருத்தி: ஸதமஸி ரஜஸி
ப்ரோத்ததே துர்நிவாரா
சித்தம் தாவத் குணா: ச க்ரதிதம்
இஹ மித: தாநி ஸர்வாணி ரோத்தும்
துர்யே த்வயி ஏக பக்தி: சரணம் இதி பவாந்
ஹம்ஸரூபி ந்யாகாதீத்
பொருள்: குருவாயூரப்பா! எங்கும் நிறைந்துள்ளவனே! ஸத்வ குணம் சில சமயங்களில் அதிகமாவதால், சிற்றின்ப உலக விவரங்களில் குறைகள் உண்டு என்ற அறிய முடிகிறது. இருந்தாலும் மீண்டும் ரஜோ குணமும் தாமஸ குணமும் தலை தூக்குவதால் மீண்டும் அந்த விவரங்களில் நாட்டம் அதிகரிக்கின்றது. அதனைத் தடுக்க இயலவில்லை. அந்த நேரத்தில் மனமும், விவரங்களும், குணங்களும் கலந்து விடுகின்றன. மூன்று குணங்களையும் அடக்குவதற்கான நான்காவது மார்க்கமான ஏகாந்த பக்தியை பின்பற்றுமாறும், அதுவே உன்னை அடைய கதி என்றும் நீ அன்னப் பறவையாக வந்து ஸநகர் முதலியவர்களிடம் கூறினாயாமே!
3. ஸந்தி ஸ்ரேயாம்ஸி பூயாம்ஸி அபி
ருதி பிதயா கர்மிணாம் நிர்மிதாநி
க்ஷுத்ர ஆநந்தா: ச ஸாந்தா பஹுவித கதய:
க்ருஷ்ண தேப்ய: பவேயு:
த்வம் ச ஆசக்யாத ஸக்கயே நநு மஹிததமாம்
ச்ரேயஸாம் பக்திம் ஏகாம்
த்வத் பக்தி ஆநந்த துல்ய: கலு விஷய
ஜுஷாம் ஸம்மத: கேந வா ஸ்யாத்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கர்மங்களைக் (கடமைகளை) செய்வதற்கு, அவற்றை செய்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நன்மைகள் பெறுவதற்கு பல வழிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அவை மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறைந்த இன்பம் தருவதாகவும், நிலையற்ற பல பதவிகளை அளிப்பதாகவும், முடிவுள்ளவை ஆகவும் உள்ளன. நீ உனது உற்ற நண்பனான உத்தவரிடம். மற்ற அனைத்து வழிகளிலும், சிறந்த நன்மை பெற என்னிடம் பக்தி கொள்வதே சிறந்தது. என்றாய். அற்பமான விஷயங்களில் சுகம் காணும் மனிதர்களுக்கு உனது பக்தி மூலம் கிடைக்கும் பேரானந்தத்திற்கு ஈடாக எதுதான் கிடைக்கும்?
4. த்வத் பக்த்யா துஷ்ட புத்தே: ஸுகம் இஹ சரத:
விச்யுத ஆசஸ்ய ச ஆசா:
ஸர்வா ஸ்யு: ஸௌக்யமய்ய: ஸலில
குஹரகஸ்ய இவ தோய ஏகமய்ய:
ஸ: அயம் கலு இந்த்ர லோகம் கமலஜ
பவநம் யோக ஸித்தீ: ச ஹ்ருத்யா:
ந ஆகாங்க்ஷதி ஏதத் ஆஸ்தாம் ஸ்வயம் அநுபதிதே
மோக்ஷ ஸௌக்யே அபி அநீஹ:
பொருள்: குருவாயூரப்பா! உன்னிடம் மாறாத ஆழ்ந்த பக்தி உடையவன் எந்தவிதமான பற்றும் இல்லாமல் மிகுந்த மிகழ்வுடன் உள்ளான். நீரின் நடுவே உள்ளவனுக்கு பார்க்கும் இடம் அனைத்தும் நீராக உள்ளது போல, உனது பக்தி உடையவனுக்கு அனைத்து திசைகளும் இன்பம் அளிக்கின்றன. அப்படிப்பட்டவன் இந்த்ரனின் ஸ்வர்க்கத்தையோ, ப்ரும்மாவின் ஸத்ய லோகத்தையோ, யோகிகள் விரும்பும் யோக சித்திகளையோ நாடுவதில்லை. ஏன் மோட்சம் தானாகவே கிடைத்தாலும் அதனைக் கூட ஏற்பதில்லை.
5. த்வத் பக்த: பாத்யமாந: அபி ச விஷய ரஸை:
இந்த்ரிய அசாந்தி ஹேதோ:
பக்த்யா ஏவ ஆக்ரம்யமாணை: புந: அபி கலுதை:
துர்பலை: ந அபிஜய்ய:
ஸப்த அர்ச்சி: தீபித அர்ச்சி: தஹதி கில
யதா பூரி தாரு ப்ரபஞ்சம்
த்வத் பக்தி ஓகே ததா ஏவ ப்ரதஹதி துரிதம்
துர்மத: க்வ இந்த்ரியாணாம்
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய பக்தன் தனது இந்த்ரியங்கள் வசப்படாமல் உள்ளதால் சிற்றின்பங்கள் நுகர்ந்து துன்பம் அடைகிறான். ஆயினும் ஒரு நிலையில் பக்தியின் வேகத்தால் இந்திரியங்கள் வெல்லப்பட்டு, மீண்டும் அந்த சிற்றின்பங்கள் அவனை நெருங்குவதில்லை. எளிதாக எரிகின்ற நெருப்பானது எப்படி விறகுகளை தன் வசம் இழுத்து எரிகின்றதோ, அதுபோல் உன்னிடம் வைத்த பக்தியானது பாவங்கள் அனைத்தையுமே அழிக்கிறது. அதன் பின்னர் இந்த்ரியங்கள் ஆதிக்கம் எப்படி இருக்க முடியும்?
6. சித்த ஆர்த்ரீபாவம் உச்சை: வபுஷி
ச புலகம் ஹர்ஷ பாஷ்பம் ஹித்வா
சித்தம் கத்யேத் கதம் வா கிமு பஹு
தபஸா வித்யயா வீத பக்தே:
த்வத் காதா ஆஸ்வாத ஸித்த அஞ்ஜந ஸதத
மரீம்ருஜ்யமாந: அயம் ஆத்மா
சஷுர்வத் தத்வ ஸுக்ஷ்மம் பஜதி ந து ததா
அப்யஸ்தயா தர்க்க கோட்யா
பொருள்: குருவாயூரப்பா! மனம் எப்போதும் தூய்மையுடனும் ஆனந்தத்துடனும் இருப்பது (உன்னைப் பற்றிக் கூறும்போது) உடல் சிலிர்ப்பது. ஆனந்தக் கண்ணீர் பெருகுவது இது போன்று இல்லையென்றால் மனத்தூய்மை எப்படி கிடைக்கும்? பக்தி என்பது இல்லை என்றால் தவமும், ஞானமும் இருந்து என்ன பயன்? ஸித்தியின் மூலம் கிடைத்த மையைக் கண்களில் பூசுவதால் தீர்க்கமான பார்வையைக் கண் பெறுகிறது. அதுபோல் உனது சரிதங்களைக் கேட்டு கேட்டு மனம் (ஆத்மா) தூய்மை பெற்று உண்மையான ஞானம் பெறுகிறது. அந்த ஞானம் மிகுந்த நுண்ணிய பயிற்சிகள் மூலம் கிட்டுவதில்லை.
7. த்யாநம் தே சீலயேயம் ஸம தநு ஸுக
பத்த ஆஸந: நாஸிகா அக்ர
ந்யஸ்த அக்ஷ: பூரக ஆத்யை: ஜித பவந பத:
சித்த பத்மம் து அவாஞ்சம்
ஊர்த்வ அக்ரம் பாவயித்வா ரவி விது சிகிந:
ஸம்விசிந்த்ய உபரிஷ்டாத்
தத்ரஸ்தம் பாவயே த்வாம் ஸஜல ஜல தர
ச்யாமளம் கோமள அங்கம்
பொருள்: குருவாயூரப்பா! நான் உனது த்யான நிலையை அறிய வேண்டும். அதற்கு உடலை நேராக வைத்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பார்வையை இரு புருவங்களின் மத்தியில் நிலை நிறுத்துவேன். பூரகம் மூலமாக ப்ராண வாயு வழியை வென்று விடுவேன். கீழ் நோக்கி உள்ள இதயத்தாமரை மேல்நோக்கி உள்ளதாகக் கண்டு, அதன் மேல் சூரிய மண்டலம், சந்த்ர மண்டலம், அக்னி மண்டலம் உள்ளதாகக் கொள்வேன். அந்த அக்னி மண்டலத்தின் நடுவில் நீர் கொண்ட நீலமேகம் போன்று அழகிய நிறம் உடைய உனது திருமேனியைத் தியானம் செய்வேன்.
8. ஆநீல ச்லக்ஷ்ண கேசம் ஜ்வலித மகர
ஸத் குண்டலம் மந்த ஹாஸ
ஸ்யந்த ஆர்த்ரம் கௌஸ்துப ஸ்ரீ பரிகத
வநமாலா உரு ஹார அபிராமம்
ஸ்ரீவத்ஸ அங்கம் ஸுபாஹும் ம்ருது லஸத்
உதரம் காஞ்சந ச்யாய சேலம்
சாரு ஸ்நிக்த ஊரும் அம்போருஹு லலித
பதம் பாவயே அஹம் பவந்தம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒளி வீசும் கறுத்த தலைமுடி; காதில் ஒளிவீசும் அழகிய மகர குண்டலங்கள்; அழகிய உதடுகளில் கனிவான புன்னகை: கவுஸ்துபம் என்ற நீலமணியால் மேலும் ஒளிவீசும் வைஜயந்தி என்ற மாலை; பெரிய முத்து மாலைகள்; ஸ்ரீவத்ஸம் என்ற அழகிய மச்சம்; நீண்டு விளங்கும் அழகிய கைகள்; மெலிதான ம்ருதுவான வயிறு: தங்கம் போன்ற பட்டு ஆடை: உருண்டு திரண்ட அழகிய கால்தொடைகள்; தாமரை போன்று சிவந்தும் அழகாகவும் மலர்ந்தும் உள்ள திருப்பாதங்கள்- இப்படிப்பட்ட உனது உருவத்தை நான் என்றும் த்யானிப்பேன்.
9. ஸர்வ அங்கேஷு அங்க ரங்கத் குதுகம்
இதி முஹு: தாரயந் ஈச சித்தம்
தத்ர அபி ஏகத்ரயுஞ்ஜே வதந ஸரஸிஜே
ஸுந்தரே மந்த ஹாஸே
தத்ர ஆலீநம் தம் து சேத: பரம ஸுக
சித் அத்வைத ரூபே: விதந்வந்
அந்யத் நோ சிந்தயேயம் முஹு: இதி
ஸமுபாரூட யோக: பவேயம்
பொருள்: குருவாயூரப்பா! உனது த்யானத்தின் மீது மிகவும் விருப்பம் உடைய என் மனதை ஒவ்வோர் உறுப்பின் மீதும் நிலை நிறுத்துவேன். அத்தகைய உறுப்புகளில் மிகவும் அழகானதும், புன்னகையுடன் கூடியதான தாமரை போன்ற முகத்தின் மீது சிந்தனையை ஒன்றி நிறுத்துவேன். அப்படி நிலை நிறுத்திய மனதை, ஸச்சிதானந்த வடிவமானதும், ஈடு எதுவும் இல்லாததும் ஆகிய ப்ரஹ்மமாகிய உன்மீது செலுத்தி வேறு எதையும் நினைக்காமல் இருப்பேன். இப்படியாக நான் த்யானத்தில் மேன்மேலும் உயர்வேன்.
10. இத்தம் த்வத் த்யாந யோகே ஸதி புந: அணிமா
ஆதி அஷ்ட ஸம் ஸித்தய: தா:
தூர க்ருதி ஆதய: அபி ஹி அஹ மஹ
மிகயா ஸம்பதேயு: முராரே
த்வத் ஸம்ப்ராப்தௌ விலம்ப ஆவாஹம்
அகிலம் இதம் ந ஆத்ரியே காமயே அஹம்
த்வாம் ஏவ ஆநந்த பூர்ணம் பவநபுரபதே
பாஹிமாம் ஸர்வ தாபாத்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முரன் என்ற அசுரனை அழித்தவனே! இப்படியாக த்யானத்தில் ஈடுபட்ட என்னிடத்தில் அணிமா முதலான அஷ்டமா சித்திகளும், தூரத்தில் பேசுவதைக் கேட்கும்திறன், தூரத்தில் உள்ளவற்றைப் பார்க்கும் திறன் ஆகிய ஸித்திகள் நான் முந்தி நீ முந்தி என்று ஓடி வரும், ஆனால் இவை உன்னை அடைவதை தடுக்கும் என்பதால் நான் அவற்றை விரும்பமாட்டேன். ஆனந்தமே உருவமாக உள்ள உன்னை மட்டும் விரும்பி நிற்பேன். எனது துயர்களை நீயே களைந்து என்னைக் காக்க வேண்டும்.