மாயம் செய்வதில் வல்லவன் என்பதால் கிருஷ்ணருக்கு மாயன் என்ற பெயருண்டு. மாயன் என்ற சொல் வாமனருக்கும் பொருந்தும். குள்ளமாக வந்து மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். ஆனால், திருவடியால் அளக்கும்போது திரிவிக்ரமானாய் வானுக்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்தார். சின்ன அடியைக் காட்டி பெரிய அடியால் பூமியை அளந்ததால் வாமனருக்கும் மாயன் என்ற பெயர் உண்டானது.