Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ... அஷ்டலட்சுமி கோவிலுக்குள் கரப்பான் பூச்சிகள்! அஷ்டலட்சுமி கோவிலுக்குள் கரப்பான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகம் நடத்தி வரும் இன்ஜினியரிங் மாணவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
11:08

அதிகாலையில் படரும் பனிமூட்டத்தின் மத்தியில் பாய்ந்தோடி வரும் அருவியின் சப்த இசையில், மனதை தொட்டு தாலாட்டும் குளிர்ந்த காற்று, எங்கும் பசுமை, எதிலும் பசுமையாக காணப்படும் இயற்கை தந்த இடம் வால்பாறை.இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இங்கு, 11 வயது முதல் இறைவன் மீது கொண்ட பாசத்தால், கோவில்களில் பள்ளி முடிந்த பின் சேவை செய்து, இறையருள் பெற்ற அந்த சிறுவன், தற்போது கோவையில் உள்ள ஒரு கல்லுாரியில் நான்காமாண்டு பி.இ., படித்து வருகிறார்.

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மகாலட்சுமி தம்பதிகளின் புதல்வன் விஜயகுமார், ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து கூறியதாவது: நான் சிறுவயது முதலே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டேன்.இறைவன் மீது கொண்ட பற்றினால், கோவிலில் சிறு சிறு சேவைகளை செய்து வந்தேன்.நான் பள்ளியில் படிக்கும் போதே, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவஸ்ரீரமணன், சிவஸ்ரீகண்ணன் சிவாச்சாரியார்களிடம் முறைப்படி வேதம் கற்றுக்கொண்டேன்.அதன் வாயிலாக பல்வேறு கோவில்களில் ஹோமங்கள், கும்பாபிஷேகங்கள் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனது, 21 வயதில் இது வரை 35 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளேன்.

இப்போதெல்லாம் மதம், சடங்கு எல்லாம் ஒரு பழக்கவழக்கமாகவே மாறியுள்ளது.இதை மாற்ற, நமது இந்து சமுதாயத்தின் விஞ்ஞான உண்மைகள் தத்துவம், இந்து மதத்தின் உயர்ந்த கருத்துக்களைஆன்மிக சொற்பொழிவாக கோவில் விழாக்களில் தொகுத்து வழங்கினேன். கடந்த ஆண்டு வால்பாறை ஸ்ரீஷீரடிசாய்பாபா கோவிலில் நடந்த விழாவில் எனது ஆன்மிக சொற்பொழிவை பாராட்டி, சொற்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை கோவில் நிர்வாகத்தினர் வழங்கினர்.இந்து சமயத்தின் விஞ்ஞான உண்மைகள், தத்துவம் ஆகியவற்றை தொகுத்து என்ன தவம் செய்தாய் இந்துவாய் பிறப்பதற்கு என்ற நுாலை எழுதி வருகிறேன். என் உயிர் உள்ளவரை எல்லாம் வல்ல இறைவனுக்கு சேவை செய்வதே எனது நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar