பதிவு செய்த நாள்
31
ஆக
2015
11:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராகவேந்திர ஸ்வாமிகளின், 344வது ஆராதனை மஹோத்ஸவம் விழா நேற்று துவங்கியது. கிருஷ்ணகிரி பழையபேட்டையில், ராகவேந்திர ஸ்வாமிகளின், 344வது ஆராதனை மஹோத்ஸவம், 6வது ஆண்டாக, நேற்று தொடங்கி, நாளை மறு நாள் வரை, 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று காலை, 6.30 மணிக்கு, கோ பூஜையும், 7.30 மணிக்கு ஸ்ரீ ராகவேந்திர அஷ்டாக்ஷர ஹோமமும், காலை, 10.30 மணிக்கு பெங்களூரு மாஸ்டர் அனிருத்தின் பக்தி இன்னிசை கச்சேரியும், மாலை, 7 மணிக்கு விக்ஞான நிதி தீர்த்த பஜனா மண்டலியினரின் தாஸர பதகளு நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாளான இன்று (ஆக.31) காலை, 10.30 மணிக்கு, மேட்டூர் பிரதர்ஸ் சஞ்சீவி - முரளி ஆகியோரின் பக்தி இன்னிசை கச்சேரியும், மாலை, 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. மூன்றாவது நாளான வரும், 1ம் தேதி காலை, 10.30 மணிக்கு, தர்மபுரி பிரதர்ஸ் வேணு-ரவி ஆகியோரின் இன்னிசை கச்சேரியும், மாலை, 7 மணிக்கு பழையபேட்டை ஸ்ரீவாசவி மகளிரணியினர் தாஸர நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பக்தர்கள் கலந்து கொள்ள, ஸ்ரீ ராம ஆஞ்சநேய ஸேவா சமிதி ட்ரஸ்ட் நிர்வாக குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.