கள்ளக்குறிச்சி: மழை மற்றும் மக்கள் நலன் வேண்டி கள்ளக்குறிச்சியில் ஆன்மிக ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஆதிபராŒக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில் மழை மற்றும் மக்கள் நலன் வேண்டியும், பஞ்சபூதங்களின் சீற்றம் தணியவும் 23ம் ஆண்டு ஆடிப்பூர விழா மற்றும் கஞ்சி வார்த்தல் விழா நேற்று துவங்கியது. காலை 9:00 மணிக்கு Œக்தி கொடி ஏற்றுதல் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் பால்குடம், Œக்தி கலசம், முளைப்பாறி கலசம், அக்னி சட்டி ஏந்தி கோவிலிருந்து ”ந்தர வினாயகர் @காவில் சாலை, கவரை தெரு, மந்தைவெளி, காந்தி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இதில் ஏராளான பெண் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கள்ளக்குறிச்சி ஆதிபராŒக்தி சித்தர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.