ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அறிவு திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷி 105 வது பிறந்தநாள் விழா, மனைவி நல வேட்பு நாள் விழா மற்றும் கோயிலின் 11 வது ஆண்டு துவக்க விழா நடந்தது. செயலாளர் அய்யாசாமி தலைமை வகித்தார். அறங்காவலர் சந்திரன் முன்னிலை வகித்தார். பேராசியர் ராஜேந்திரன் வரவேற்றார். பொருளாளர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். மனவளக்கலை மன்ற மூத்த பேராசிரியர் நன்மணி பேசியதாவது: மகரிஷியின் தத்துவங்களை உணர்ந்து கொண்டால் வாழ்வில் அனைத்திற்கும் விடை கிடைக்கும். தியானம் செய்து மனதை சரியாக வைத்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். எல்லோரின் உள்ளத்திலும் இன்பம் நிறைந்து இருக்கிறது. ஆனால், அதனையறியாமல் நாம் வெளியில் இன்பத்தை தேடுகிறோம். விளக்கின் ஒளிபோல இறைவனும் நீக்கமற நிறைந்து இருக்கிறான், என்றார். பேராசிரியர் காலசாமி நன்றி கூறினார். அகிலா பேசினார். ஏற்பாடுகளை அறிவுதிருக்கோயில் தலைவர் சர்வஜித் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர். மாலையில் மனைவி நலவேட்பு விழா நடந்தது.