மிகக் கொடியவன் ஒருவன் மகான் ஒருவரின் அறிவுரையைக் கேட்ட ஒரு வார காலத்திலேயே சன்னியாசம் பெற்று விட்டான். சீடர்களுக்கு மிகவும் ஆச்சரியம்! அவரிடமே விளக்கம் கேட்டனர். அப்போது மகான், ஒரு விதத்தில் பார்த்தால் நல்லவர்களைவிட குற்றவாளிகள்தான் சீக்கிரமாகப் பக்குவ நிலைமை அடைய முடியும். தங்களை நல்லவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு அது சுலபமாக சிந்திப்பதில்லை! என்றார்.