பதிவு செய்த நாள்
03
செப்
2015
11:09
ஈரோடு: ஈரோடு ஸ்ரீவாரி டிரஸ்ட், திருமலை திருப்பதி தேவஸ்தானம், இணைந்து திருப்பதி ஏழுமலையானுக்கு, தரிசன டிக்கெட் வழங்கி வருகின்றனர். நேற்று முதல், திருமலை தேவஸ்தானம் புதிய ஏற்பாடு செய்துள்ளது. சுதர்ஸன கவுன்டரில், சிறப்பு தரிசனத்துக்கான, 300 ரூபாய் டிக்கெட், ஸ்ரீவாரி டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. தினமும், காலை, 11 மணி, மதியம், 12 மணி, 1 மணி, 3 மணி, 4 மணி, 5 மணி மற்றும், 6 மணி ஆகிய நேரங்களுக்கான தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் வாங்க வரும் போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும். வரும் புரட்டாசி, நவராத்திரி பிரம்மோற்சவம் நாட்களில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் உமாபதி தெரிவித்துள்ளார்.