பதிவு செய்த நாள்
05
செப்
2015
12:09
வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் , கவுண்டன்புதூர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 7ம் தேதி நடக்கிறது.
விழா முன்னிட்டு, (செப்., 6), காலை, 7 மணிக்கு மங்கள இசை, அனுஞ்கை, விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம் தீபாராதனை நடக்கிறது. காலை, 10 மணிக்கு சேமங்கி, காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வருதல், மாலை, 6 மணிக்கு கானாம்ருதம், வினை தீர்க்கும் விக்னேஸ்வரர் வழிபாடு, மஹா சங்கல்பம், முளைப்பாரி அழைத்தல், தீபாரதனை, விசேஷ உபச்சாரம் 1ம் காலம், இரவு, 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, 7ம் தேதி, காலை, 4 மணிக்கு நாதப்ரவாதம், திருமறை விண்ணப்பம், தும்பிக்கையன் வழிபாடு, நாடி சந்தானம், காயத்ரி ஷோமம், ஸ்ரீ கற்பக விநாயகர் மூலமந்த்ர, மாலா மந்த்ர ஜோமம், விசேஷ திரவிய ஹோமம், தீபாராதனை நடக்கிறது. காலை, 6.30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, கற்பக விநாயகர் கோபுர மஹா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், தசதரிசனம், மஹா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்கின்றனர்.