சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் தினமும் நள்ளிரவில் இந்திரன், சுவாமிக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதற்காக இரவில் அனைத்தும் பூஜைகளும் முடிந்தபின்பு, அர்ச்சகர்கள் அர்த்தஜாம பூஜைக்கு வேண்டியவற்றை சுவாமி சன்னதியில் வைத்துவிட்டு சென்றுவிடுவர். மறுநாள் அதிகாலையில் நடை திறக்கும்போது மற்றொரு அர்ச்சகர், அகம் கண்டதைப் புறங்கூறேன். இது சத்தியம், என்று சொல்லி நடை திறப்பார்.