அன்னுார்: விஸ்வ இந்து பரிஷத் சார்பில், அன்னுாரில், கிருஷ்ண ஜெயந்தி விழா 5.9.15 நடக்கிறது.
அன்னுார் ஐயப்பன் கோவிலிலிருந்து, 5.9.15 மாலை 4:00 மணிக்கு, கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகளின் ஊர்வலம் புறப்பட்டு, தென்னம்பாளையம் ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக பெருமாள் கோவிலை அடைகிறது. அங்கு ஓரைக்கால்பாளையம் கிருஷ்ண லீலா பஜனை குழுவின் பஜனை நடக்கிறது. சிறந்த வேடம் அணிந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.விழாவில், சித்தர் துரைசுவாமி அருளுரை வழங்குகிறார். பரிஷத் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.