இடைப்பாடி: மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி சக்தி பீடத்தின், இடைப்பாடி கிளை சார்பில் 4.9.15 நடந்த கஞ்சி கலய ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இடைப்பாடி, கேட்டுக்கடை பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் கிளை உள்ளது.
சக்தி பீடத்தின் சார்பில், கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. இடைப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் வளாகம் வரை வந்து, பின்னர் ஆதிபராசக்தி கோவில் வரை சென்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சிறப்பு பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.