சத்தியலோகத்தில், பிரம்மா ஜபமாலையை உருட்டியபடி வேதம் சொல்லிக் கொண்டிருந்தார். எதிரில் சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். திடீரென சிங்கம் கர்ஜிக்கும் சப்தம் கேட்டது. அந்த அதிர்ச்சியில் தடுமாறிய பிரம்மா கீழே விழுந்தார். அவர் எழுந்த போது, இரணியன் அரண்மனையில் துõணைப் பிளந்தபடி, விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த கோலம் தெரிந்தது. இந்திரன், குபேரன், சந்திரன் போன்ற தேவர்கள் எல்லோரும் எவ்வித இடையூறுமில்லாமல் அவரவர் பணியில் ஈடுபட்டிருக்க, பிரம்மாவுக்கு மட்டும் ஏன் அவலநிலை என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இனியாவது நல்லவர்களுக்கு வரம் தர வேண்டும். இரணியன் போன்ற அரக்கர்களுக்கு வரம் அளிப்பது கூடாது என்பதை கர்ஜனை மூலம் நரசிம்மர் உணர்த்தியதை அறிந்தனர்.