கோயிலில் சுவாமியை வழிபட்டபின், பிரகாரத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். தியான நிலையில் இருக்கும் இவரை காவல் தெய்வம் என சிலர் கூறுவர். கோயில் கணக்குவழக்குகளைச் சரிபார்ப்பதும், சிவ வழிபாட்டிற்கு இடையூறு வராமல் தடுப்பதும் சண்டிகேஸ்வரரின் வேலை. கோயிலின் காவல்காரராக இருப்பவர் பைரவர். இவருக்கு க்ஷேத்திரபாலகன் என்று பெயருண்டு. கோயிலைப் பாதுகாப்பவர் என்பது இதன் பொருள்.