அப்பா பைத்திய ஸ்வாமி கோவிலில் புதுச்சேரி முதல்வர் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2015 12:09
சேலம்: சேலம், சூரமங்கலத்தில் உள்ள, அப்பா பைத்திய ஸ்வாமி கோவிலுக்கு நேற்று வருகை தந்த, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாதம் ஒரு முறை, சேலம், சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்திய ஸ்வாமி கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், இங்குள்ள அப்பா பைத்திய ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு தான் காரியத்தை தொடங்குவார். நேற்று காலை 10 மணியளவில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அப்பா பைத்திய ஸ்வாமி கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு மனமுருக பிரார்த்தனை செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள அப்பா பைத்திய ஸ்வாமியின் மெழுகுவர்த்தி சிலை முன்பு சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, காலை 11 மணிக்கு அங்கிருந்து காரில் புதுச்சேரி புறப்பட்டார்.