பதிவு செய்த நாள்
08
செப்
2015
12:09
சேலம்: சேலம், கோட்டை, ராமசந்திர பஜனை மடத்தில், நேற்று நடந்த ராமர், சீதாதேவி கல்யாண உற்சவம் நேற்று கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலையில் அழகிரிநாதர் கோவிலிலிருந்து, ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயர் தெய்வங்களின் சிலைகள் ராமர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. இரவில், கணபதி ஹோமம், நவக்கலச பூஜை, புண்ணியாஹ வாசனம், தீபாராதனை நடந்தது. நேற்று காலையில், நவக்கிரஹ ஹோமம், கணபதி ஹோமம் ஆகியன நடந்தது. ராமசந்திரபஜனை மட ராமர் சன்னதியில் ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு, கணபதிக்கு மஹா புணர்ருத்தாரண விழா நடந்தது. மதியம் ராமர், சீதாதேவிக்கு மஹா திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, 108 வகை பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது.