புதுச்சேரி: தேங்காய்த்திட்டு வடபத்திரகாளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வரு கின்றனர். தேங்காய்த்திட்டு மெயின்ரோட்டில் வடபத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த மாதம் ஆடி திருவிழா, விளக்கு பூஜைகள் நடந்து முடிந்தது. கோவில் உண்டியலில் காணிக்கை பணம் நிறைந்திருந்தால், ஓரிரு நாட்களில் உண்டியல் திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்திருந்தது. இந் நிலையில் நேற்று பகல் 3:00 மணிக்கு கோவி லில் விளக்கு ஏற்ற வந்த பெண்கள், உண்டியல் உடைந்திருந்ததை கண்டு அறங்காவலர் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று பகல் 2:30 மணிக்கு மழை பெய்தபோது, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், இரும்பு கம்பியால் உண்டியலை திறந்து பணத்தை திருடிச் சென்றிருந்தனர். முதலியார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.