சிவனை வணங்கி அவரது அருளைப் பெற நான்கு வழிகள் உள்ளன. 1. சரியை - சிவன் கோவில்களில் தினமும் வழிபாடும், இயன்ற அளவிற்கு திருப்பணியும் செய்தல் 2. கிரியை - சிவனின் திருவுருவத்தை முழுமனதுடன் வணங்குதல் 3. யோகம் - சிவனை மனதில் நிறுத்தி தவம் செய்தல் 4. ஞானம் - நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்று, மானசீகவழிபாடு மூலம் ஞானம் பெற்று சிவனை அடைதல். இந்நான்கு வழிகளில் ஏதேனும் ஒரு வழியை பின்பற்றினால்கூட முக்தி பெறலாம்.