ஆலயங்கள் மூவகைப்படும். அவை வித்யாலயம், மடாலயம், தெய்வ ஆலயம் என்பன.
* வித்யாலயத்தை வித்தை லயிக்கும் இடம் என்பர். இங்கு மாணவர்களுக்கு தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் வித்தைகள், சாஸ்திரங்கள் கற்றுத் தரப் படும். இங்கு சென்றால் கல்வி அறிவு சிறக்கும். * மடாலயம் என்பது குடும்பம் மற்றும் சுய ஆசாபாசங்களைத் துறந்து ஞானம் வேண்டிச் செல்பவர்கள் இருக்கும் இடம். இவ்விடத்தில், ஞானமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் ஒன்றிணைந்து நுõல்களைப் பயில்வர். * மற்றொன்று தெய்வ ஆலயம். இங்கு பக்திநெறியில் ஈடுபாடு கொண்டவர்கள் பலவிதமான வழிபாட்டு முறைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த மூ ன்று ஆலயங்களுமே மனிதனை மேல்நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.