பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்புக்குரியது. உலகெங்கும் இருந்து, 20 லட்சம் பக்தர்கள் தீபத்திருவிழாவை தரிசிக்கின்றனர். இந்த ஆண்டு தீபத்திருவிழா வரும் நவம்பர், 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 25ம் தேதி, மகா தீபப்பெருவிழா நடக்கிறது. கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக, வரும், 16ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது. காலை, 6.05 மணிக்கு மேல், 7.25 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தமும், அதை தொடர்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.