பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம், அரசடி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. மாமல்லபுரம், கடற்கரை சாலை, புண்டரீக புஷ்கரணி குளக்கரை அரச மரத்தடியில், மண்டபம் இன்றி, கற்பக விநாயகர் சிலை, நீண்டகாலமாக திறந்தவெளியில் இருந்தது. இதையடுத்து, அப்பகுதி கடைக்காரர்கள், தற்போது கருங்கல்லில் சிறு மண்டபம் அமைத்து உள்ளனர். அதன் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, விக்னேஸ்வர பூஜை, அஷ்டபந்தனம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை, யாகசாலை பூஜைகள் நடத்தி, கலசங்கள் கோவில் வலம் சென்று, காலை 10:00 மணிக்கு, மண்டப விமானத்தில், புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா பாலாபிஷேகம் செய்யப்பட்டு பின், மலர் அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.