பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
லாலாபேட்டை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மதுக்கரவேணி திருக்கண்மாலீசுவரர் கோவில் உள்ளது. காவிரி தென்கரையில் அமைந்துள்ள இந்த கோவில், கிருஷ்ணதோவராயரால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், மஹாகணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், விநாயகர் வழிபாடு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், விஷேச பூஜை ஆகியன நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு விநாயகர், திருக்கண்மாலீசுவரர், மதுக்கரவேணி, சுப்பிரமணியர், மயில்கொரடு, உமாமகேசுவரர் காலபைரவர், சண்டிகேசுவரர், ஆகிய கோவில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இங்கு, கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, வளையர்பாளையம், கோவக்குளம், மகாதானபுரம், திருக்காம்புலியூர், மாயனூர் ஆகிய கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.