பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
சென்னை: மீனாட்சி மகளிர் கல்லுாரி, விவேகானந்தா கல்விக்கழகம், சாஸ்திரா பல்கலைக்கழகம், ஸம்ஸ்க்ருதபாரதி ஆகியவை இணைந்து, சமஸ்கிருத மஹா சம்மேளனம் நிகழ்ச்சியை நடத்துகின்றன.கோடம்பாக்கம், மீனாட்சி மகளிர் கல்லுாரியில், செப்., 11, 12, 13 ஆகிய தேதிகளில், காலை 9:30 முதல், இரவு 8:30 மணி வரை, இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், சமஸ்கிருத நுால்கள் காட்டும் அறிவியல் கருத்தை விளக்கும் கண்காட்சி, பல புத்தக வெளியீட்டாளர்கள் பங்கு கொள்ளும் சமஸ்கிருத புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நடக்க உள்ளன. நிகழ்ச்சியை, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், செப்., 11ம் தேதி, காலை 9:30 மணிக்கு துவக்கி வைக்கிறார்.