ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வெட்டுக்குளம் கொல்லாருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவில் முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 2 ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 8.15 க்கு கோயில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரிகள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதை தொடர்ந்து கோயில் கருவறையில் உள்ள பூர்ணாதேவி, புஷ்பகலா தேவி, கொல்லாருடைய அய்யனார், காளியம்மன், கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம், அன்ன தானம் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், ஊராட்சி தலைவர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வெட்டுக்குளம் கிராமமக்கள் செய்திருந்தனர்.