வண்டலூர்:சென்னையை அடுத்த வண்டலூர், ரத்னமங்கலத்தில் அமைந்துள்ள அரைக்காசு அம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நாளை நடக்கின்றன.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "108 அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அரைக்காசு அம்மன் பீடத்தில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, நாளை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 9 மணிக்கு, சிறப்பு விளக்கு பூஜையும், மகா அலங்கார தீபமும், 108 அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை முழுவதும் அம்மன் பெயர் கொண்ட பெண்களுக்கு, சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். மேலும் தகவல்கள் பெற, 94440 20084 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.