விருத்தாசலம்: விருத்தாசலம், கொளஞ் சியப்பர் கோவில் உண்டியலில் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் காணிக்கை இருந்தது. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. உதவி ஆய்வாளர் ஜோதி, செயல் அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் 9 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம், 16.850 கிராம் தங்கம், 550 கிராம வெள்ளி பொருட்கள் இருந்தன. கடந்த ஜூன் 26ம் தேதி உண்டியல் திறந்து எண்ணியபோது 7 லட்சத்து 91 ஆயிரத்து 714 ரூபாய் ரொக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.