ஆர்.கே.பேட்டை: புளிய மரத்தில் சுயம்புவாக தோன்றியுள்ள கண்டவாரி கண்டிகை விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, கண்டவாரி கண்டிகை கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள புளிய மரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், விநாயகர் உருவம் சுயம்புவாக தோன்றியது. இதையடுத்து, அந்த புளிய மரத்தை சுற்றிலும் கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. மரத்தில் சுயம்புவாக தோன்றியுள்ள விநாயகர் பெருமானை, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். நடப்பு ஆண்டு, வரும் வியாழக்கிழமை சதுர்த்தி திதியில், இங்குள்ள சுயம்பு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற உள்ளது. சுயம்பு விநாயகருக்கு எதிரே கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.