கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் அமாவாசை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.