பதிவு செய்த நாள்
14
செப்
2015 
11:09
 
 விழுப்புரம்: விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர்சக்தி பீடம் சார்பில் ஆடிப்பூரக் கஞ்சி வார்த்தல் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் மற்றும் கருவறை அன்னைக்கு பால் அபிஷேகம் நேற்று நடந்தது. காலை 4:30 மணிக்கு கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:45 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஆடிப்பூர கஞ்சி ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சேர்மன் பாஸ்கரன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தாசில்தார் சீனுவாசன், அரசு வழக்கறிஞர் எத்திராஜீலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, காலை 11;00 மணிக்கு சக்தி பீடத்தில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், பகல் 11:30 மணிக்கு கருவறை அன்னைக்கு பால் அபிஷேகத்தை சார்பு நீதிபதி எழிலரசி துவக்கி வைத்தார். மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் பரத்குமார், இணை செயலாளர் மணிவாசகம், பொருளாளர் ரத்தினசிகாமணி, வேள்விக்குழு திரிபுரசுந்தரி, வட்ட தலைவர் பழனி, வட்ட வேள்விக்குழு பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சக்திபீடம் பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, சீத்தாராமன், சண்முகம், லட்சுமிநாராயணன், பார்வதி செய்திருந்தனர்.